பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனது கார் உங்கள் கார்கள் மணிக்கு எத்தனை மைல்கள் ஓடும்? அறுபது, எழுபது மைல் வேகத்தில் ஒட்டில்ை உடனே ஆச்சரியம் என்று வியந்துகொள்வீர்கள்! அப்படியானல் என்னுடைய கார் மணிக்கு எழுபது அல்ல - எழுபது ஆயிரம் மைல் ஒடும் என்று கூறினல் எவ்வளவு ஆச்சரியம் அடைவீர்கள் ! சாதாரணமான கார்கள் எப்பொழுதும் ஒரே வேகத்தில் ஒட மாட்டா. தவிர அவைகள் இயங்கு வதற்குப் பெட்ரோல் தேவை. அதிவேகமாய் ஓடி ல்ை வேறு கார்களோடு மோதிலுைம் மோதும். அப்படி அதிவேகமாய் ஒட்டச் சாமர்த்தியமுள்ள சாரதியும் வேண்டும். ஆனல் என்னுடைய காரோ எப்பொழுதும் ஒரே வேகமாய், எழுபது ஆயிரம் மைல் வீதம், பெட்ரோல் ஒரு துளிகூடத் தேவை யில்லாமல் ஓடும். என் காருக்கு சாரதி இல்லை ; சாரதி இல்லாமல் ஓடக்கூடிய கார் அது. வேறு கார்களோடு மோதாது. அது ஒட ஆரம்பித்து எத்தனையோ லக்ஷ வருஷங்கள் ஆகிவிட்டனவே! ஆயினும் இதுவரை எவ்வித விபத்தும் நிகழவில்லை. இவ்வளவு விரைவாக ஓடுகிறதே - என்ஜினில் ஏதேனும் சப்தமுண்டா ? கிஞ்சித்தும் இல்லை. இத் கனை வருஷங்களாக ஓடி வருகிறதே - எங்கேனும் 'கிரீச் என்ற ஓசையுண்டா ? கொஞ்சமும் கிடை யாது. சப்தம் சிறிதுகூட இல்லாத காரை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் - பார்க்கவும் மாட்டீர்கள். 17