பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனது தோழன் ஒரு பெரிய சிக்கலான கேள்வி. இதை வாசிக் கும் நேயர்கள் ஆராய்ந்து முடிவு செய்வார்களா ? - ஒன்று மட்டும் நிச்சயம். அவன் இல்லாவிட் டால் எனக்கு அணுவளவு அனுபவமும் இருக்கமாட் டாது. விருந்துக்கு அழைக்கிருரர்கள். வித விதமான உணவுகள், பலகாரங்கள், பானங்கள், நவ நவமான உடைகள், அணிகள், புதுப் புதுக் காட்சிகள், விநோதமான வேடிக்கைகள், விசேஷமான சங்கீ தங்கள் எல்லாம் உள. ஆல்ை நாம் அனுபவிக்க முடியாவிட்டால் ? அந்த நிலைமைதான் எனக்கு என் தோழன் இல்லாவிட்டால் அமையும். என் தோழன் எப்படி நடந்துகொள்கிருனே அதைப் பொறுத்தே என் இன்பங்களும் துன்பங் களும் ஏற்படுகின்றன. இன்பமும் துன்பங்தானும் உள்ளத்தோடு இயைந்ததன்றே என்று கம்பர் எளிதாகக் கூறிவிட்டார். உள்ளத்தோடு இயைந்த தோ, உடம்போடு இயைந்ததோ அதைப் பெரியார் கள் ஆராயட்டும். என் தோழைேடுதான் என் இன்ப துன்பங்கள் இயைந்துள என்னும் உண்மை யையே நான் இங்கு வற்புறுத்துகிறேன். என் தோழன் என்ன உண்கிருனே, என்ன பருகுகிருனே, என்ன பயில்கிருனே, என்ன அணி கிருனே அவை எல்லாம் என்னிடம் நன்மையோ தீமையோ விளைவித்துவிடும். என் தோழன் உணவு சாத்வீகமானதா யிருந்தால் என்னையும் சாத்வீக 27