பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பாப்பர் யார் 7 மேனுடுகளிலும் சரி, கீழ் காடுகளிலும் சரி, ஒவ்வொரு நகரத்திலும் வியாபார கிலேயங்களும் உத் யோக மன்றங்களும் நிறைந்துள்ள இடம் ஊருக்கு நடுவே இருக்கும். அந்தப் பகுதிக்கே நகரம்’ என்று கூறுவது ஆங்கில நாட்டார் வழக்கம். அந்த நகரத்தைச் சூழ்ந்து ஜனங்களின் வீடுகள் பல பகுதிகளாக வெகுதாரம்வரை பரந்திருக்கும். ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பெயர் உண்டு. சில பகுதிகளில் தனவந்தர் மிகுந்து காணப்படுவர்; சில பகுதிகளில் தரித்திரரே பெருகி யிருப்பர். இக் தப் பகுதிகளுக்கும் வெளியே, நகர்ப் புறங்களி லேயே, குபேர செல்வம் படைத்தோரும், அரசாங் கத்தில் உயர்ந்த பதவிகள் வகிப்போரும், ஆடம் பரத்தில் அதிமோகம் கொண்டோரும், ஆசிரியர், மருத்துவர், வக்கீல்கள் முதலியவர்களில் தலையான வரும் வசிப்பதைக் காணலாம். தற்காலத்தில் உலகில் அதிக விசாலமானதும், மிகக் கீர்த்தி பெற்றதும், வெகு வன்மை உடையது மான சாம்ராஜ்யம் ஆங்கிலேயர் ஸ்தாபித்துள்ள தாகும். அதற்கு உயிர் காடி போன்ற தலைநகர் 33