பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி யாருக்கு? தெரியாது. உனக்கு ஜலம் குடிக்க மட்டும் போதும். அதுவும் அதிகமாகக் குடித்துவிடாதே. நோய் வந்து விடும் ; தொண்டையை மட்டும் நனைத்துக்கொள். ஆனல் எங்களுக்கு ஒரு குடம் போதாது. நாங்கள் அடிக்கடி முகம் கழுவவேண்டும். மூன்று முறை ஸ்நானம். எங்கள் பங்களாக்களைத் தினந்தோறும் ஜலம் விட்டுச் சுத்தம் செய்வோம். முற்றத்தில் பூச் செடிகள் பார்த்தாயா? தோட்டத்தில் பழ மரங்கள் கண்டாயா ? அவைகளுக்கு ஜலம் வேண்டுமல்ல வோ ?” ஐயா, என்னல் இவ்வளவு ஜலம் இறைக்க முடியுமோ? இறைக்க முடிந்தாலும் எனக்கு வேறு வேலை இல்லையா ? என் தங்தை எனக்கு எத்தனை யோ உயர்ந்த காரியங்கள் சொல்லி யிருக்கிருரே. அவற்றிற்கு வேண்டிய அறிவும், ஆற்றலும், ஆவ லும் அளித்திருக்கிருரே. அவைகளை நான் செய்ய வேண்டாமோ? : அப்பா, அவைகளைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. தண்ணிர் இறைக்கும் வேலை ஒன்று உனக்குப் போதும். முடியாது என்று கினேயாதே. எங்களுக்கு வேண்டிய ஜலத்தை இறைத்துவிடு. உன் தொண்டையையும் நனைத்துக்கொள்ளலாம். நாங்கள் சொல்வதைக் கேள். நீ எங்கள் நண்பன் அல்லவா ? . 44