பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி யாருக்கு? கொண்டார். சாந்தியும் சமாதானமும் நிலவுறச் செய்வதே தமது முதற் கடமையாக எண்ணினர். . ஆதலால் தமக்கு உற்ற துணையாகப் பல மெய் வீரர்களைச் சேர்த்துக்கொண்டார். அவர்களில் பிர புக்களாய் இல்லாதவரைப் பிரபுக்களாக ஆக்கினர். அவர்கள் அனைவரும் ஏழைகளின் கேஷமத்தை நாடுவதும், பெண்களின் கற்பைக் காப்பதுமே தங் கள் வாழ்வின் லட்சியமாக மதித்துவந்தவர். புகழே சுவர்க்க போகம் ; இகழே நரக அனுபவம் என்பது அவர்கள் திடமான நம்பிக்கை. இந்த உயர்ந்த லட் சியத்தைத் தேடுவதில் அவர்கள் தங்கள் உடல், பொருள், ஆவி மூன்றையும் தியாகம் செய்யத் தயங் காதவர். ஆர்தர் மன்னரிடம் அளவிலா பக்தி யுடையவர். இவர்களுடைய உதவியால், இவர்களுடைய வீர தீரச் செயலால் ஆர்தர் அரசர் சாளுக்கு நாள் அதிகமாக நாட்டில் காணப்பட்ட அக்கிரமிகளை அகற்றி வந்தார். ஜனங்கள் அனைவரும், ஆர்த ரால் ஆகாதது ஒன்றில்லை. அவர் நீதிக்கு உறை விடம். கருணைக் கடல். நமக்கு ஒரு களைகண் என்று போற்றிப் புகழ்ந்து வந்தனர். அவருடைய புகழ்க் கதிர் ஆங்கில நாட்டில் மட்டுமன்றி, ஐரோப் பாக் கண்டம் முழுவதும் பரவி, அரசர்க்குரிய மெய்ப் புகழின் லட்சணம் இது என்று விளக்கி வகதது. 64