பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி யாருக்குரி வருந்தாதே. இதோ நானே சென்று உன் கண வனை மீட்டு வருகிறேன். இங்கேயே என் அரசி யுடன் இரு என்று ஆறுதல்கூறி, உடனே அந்த அரக்கனை அழித்துவரத் தன்னந்தனியாகக் குதிரை யில் ஏறிப் புறப்பட்டுவிட்டார். காடு வனந்தரங்கள் கடந்து பெண் சொன்ன கோட்டை அருகில் வந்து சேர்ந்தார். அங்கு வந்ததும், அடே அரக்கா, யாரடா இங்கே? வெளியே வா! உன்னே விரைவில் யம லோகம் அனுப்பட்டும்’ என்று இடி முழக்கம் போல் கர்ஜித்தார். உண்மைதான், எந்தப் பலசாலி யும் அவருக்கு இணையாகமாட்டான். அவரை வென்றவர் இதுவரை யாருமிலர். அதல்ை அவரு டைய வாளும் ( ஜயசீவி) என்னும் பெயர் பெற் றிருந்தது. அவருடைய சிம்மநாதம் மு ழ ங் கி ய து ம் கோட்டை வாசல் திறந்தது. ஆல்ை, திறந்ததுதான் fதாமதம். இதென்ன ஆச்சரியம்! இதரையில் வீழ்ந்துவிட்டது. அரசருக்கு ஒர் அடிகூட எடுத்து வைக்க இயலவில்லை. அசைவற்ற மரம்போல் நின் ருர். கோட்டைக்குள்ளிருந்து அந்த முரடன் வங் தான். ஆர்தர் அரசரே! நீரா ? வாரும். என்னு டன் சண்டைசெய்ய விரும்புகிறீர். நல்லது, புறப் படும். என் கோட்டைச் சிறைக்குள் உம் வீரர்களில் 66