பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி யாருக்கு P அந்தக் கிழவியைக் கண்டனர். அவளைப் பரி காசம் செய்துகொண்டிருந்தனர். அவளும் அழ ஆரம்பித்துவிட்டாள். இதற்குள் அரசர் அங்கு வந்தார். ஏளனம் செய்யாதீர்கள்! இவளை உங்களில் ஒருவருக்கு மணம் செய்து தர எனக்கு ஆசை. யார் இவளை மணப்பார் ? என்று கேட்டார். எல்லோரும் முகத்தைச் சுளித்துக்கொண்டு வேறு பக்கம் திரும்பவே, ஸர் கவைன் மட்டும் முன்வந்து, ' நான் மணந்துகொள்கிறேன் என்று கூறி அவளைத் தம் குதிரையில் ஏற்றிக்கொண்டார். மறுநாள் -リ。 வெகு கோலா கலமாக நடந்தது. ஆர்கரே மணமகன் தோழன். அரசியே அந்த மணமகளின் தோழி. இரவு வெகு சிறப்பான ஆடம்பர விருந்து. அது முடிந்ததும் மணமகன் தமது அறைக்குச் சென்ருர் நண்பர் கள் ஸர் கவைனைக் கேலி செய்தார்கள். ஆனல் அவர் அதை எள்ளளவும் பொருட்படுத்தவில்லை. அரசர் உறுதிமொழியைக் காத்து அளித்துவிட் டோம். அரசர்க்கு ஆறுதலும் ஆனந்தமும் உண்டாக்கிவிட்டோம். அது போதும் என்று எண்ணினர். சிறிது நேரம் சென்றதும், அவர் தம் மனைவி யைப் பார்க்க அவள் அறைக்குள் நுழைந்தார். ஆல்ை இது என்ன விந்தை ? ஆம், விந்தையிலும் விந்தை கிழவியைக் காணுேம். அதோ நிற்பது 72