பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமது கோய் இவ்வளவு அதிக தரித்திர நிலைமையில் இருப் பதால் இந்திய மக்கட்கு ஏற்பட்டுள்ள இன்னல்கள் ஏரtளமாகும். மனிதர்க்கும் இதர ஜீவராசிகட்கும் வேறுபாடு உண்டு. இதர ஜீவராசிகள் உடல் வாழ்வு ஒன்றையே அறியும். மனிதன் மட்டுமே உடல் வாழ் வோடு உயிர் வாழ்வும் உணர்பவன். இவ்விரு வாழ் விற்கும் வேண்டிய சாதனங்கள் பல. இந்தியர்க்கு உயிர் வாழ்விற்குரிய வசதிகள் கிடையாவிடினும் உடல் வாழ்விற்குரிய வசதியேனும் கிடைக்க வேண் டாமோ ? உடல் வாழ்வினும் உயிர் வாழ்வே சிறக் தது. ஆனல் உயிர்க்கு உடலே சாதனம் அல்லவா? சுவரை வைத்துத்தானே சித்திரம் எழுதவேண்டும்? இந்திய மக்களின் உடற்-சுவரை வைக்க உணவு, உடை, உறையுள் மூன்றும் போதிய அளவு கிடைக் கின்றனவோ ? போதுமான உணவில்லை. உண்பது நாழி உடுப்பது நான்கு முழம் என்பது நமது முன்னேர் ஆசாரம். ஆனல் இக்காலத்தில் நாள்தோறும் உண்ண நாழி கிடைப்பவர் எத்தனை பேர் ? இந்திய ஜனங்களில் ஏழு கோடிப் பேர் வருஷத்தில் ஒரு வேளையாவது வயிறு கிறையப் புசிப்பதற்கு இல் லாதவர் என்று ஸர் வில்லியம் ஹண்டர் துரை கூறு கிருர். ஏழைகள் உணவு உண்டோம் என்று உரையாமல், கஞ்சி குடித்தோம் என்று சொல் 79