பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாகரிகத்திற்கு வழி ஆயினும் இங்கனம் சிலர் நாகரிகத்தை வுெறுப்பதாக விளம்பினும், ஜனங்கள் நாகரிகத் த்ையே விரும்புகின்றனர் என்பதில் சந்தேகமில்லை. நாகரிகத்தை வெறுப்பதாகக் கூறுவோரும்கூட முற்றிலும் வெறுப்பதாகத் தெரியவில்லை. யாரும் மாட்டு வண்டியில் - ஏன், குதிரை வண்டியிலுங் கூடப் - போகப் பிரியப்படுவதில்லை. மோட்டா ரையே விரும்புகிருர்கள். விமானத்தில் ஏறிச் செல் வதற்கு இல்லையே என்று ஏங்கவும் செய்கின்றனர். விளக்கெண்ணெய் விளக்கு எந்த வீட்டில் காண முடியும்? எங்கும் மண்ணெண்ணெய் விளக்கே. மின்சார விளக்கு எப்பொழுது கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆகவே யார் எவ்வளவு கூறிலுைம் காக ரிகத்தை அணுவளவு கூட நகர்த்திவிட முடியாது. அவ்வளவு ஆழமாக அது வேர் ஊன்றிவிட்டது. ஆதலால் நாகரிகம் அடைவதற்கான மார்க்கம் எது என்று ஆலோசிக்க ஆரம்பித்தேன். இப்பொழுது மக்களிடை காணப்பெறும் செயல்களில் நாகரிகம் முதிர்ந்தவை எவை என்று ஆராய்ந்தேன். அந்த ஆராய்ச்சியின் பயனுய் அறிந்தவற்றுள் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன். வைகறைத் துயிலெழு என்பது ஒளவையின் மொழி. அதைப் பின்பற்றி நமது முன்னேர் அதி காலையில் ஐந்து மணிக்கு முன்பே கித்திரையை 87