பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி யாருக்கு? நீத்து வந்ததாக அறிகிருேம். ஆனல் அந்தப் பழைய வழக்கம் நாகரிகத்திற்கு ஒத்ததன்று. அதல்ை இப்பொழுது நாம் ஆதவன் j பின்பே ஆறு மணிக்கு மேல் கண் விழிக்கிருேம். எழு மணிக்குப் பின் எழுவது ஏற்றது என்று கூடச் சொல்லலாம். பழைய காலத்தில் எழுந்தவுடன் வாய் கொப் பளித்து, முகம் கழுவி, ஈச்வரனைத் தொழுவார் களாம். அவை அவைசியம் அல்லவா ? கண் விழித் ததும் காப்பி குடிப்பது, வெற்றிலை போடுவது, சுருட்டுப் பிடிப்பது இவையல்லவோ நாம் செய்ய வேண்டிய அவசரமான காரியங்கள் ? ஊருக்கு வெளியே போய் மலங் கழித்தலும், மலங் கழித்த பின் மலத்தை மண்கொண்டு மூடி வரு தலும் பழைய அனசாரம் தெரு ஓரங்களில் இரு பக்கமும் மழை ஜலம் போக வடிகால்கள் கட்டி யிருக்கின்றனரே, காலையில் விடியுமுன் அவைகளில் மலங் கழித்தாலென்ன ? தோட்டி சுத்தம் செய்ய மாட்டானே ? மலங் கழித்தால் மண் கொண்டோ சாம்பல் கொண்டோ மூடுவானேன் ? அசங்கிய மானவைகளை அப்புறப்படுத்தத்தானே தோட்டிக் குப் பணம் கொடுக்கிருேம் ? நமக்குத் துர்காற்றம் வருமானல் கக்கூசுக்குப் போகும்பொழுது சுருட்டு ஏற்றிக் கொள்ளலாமே ! சுருட்டு நாற்றம் மற்ற நாற்றங்களை அடித்துவிடு மல்லவா? 88