பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10

இருட்டு வெளிச்சம், பள்ளம் மேடு, வெண்மை கருமை, இன்பம் துன்பம் என்பதாகவே வாழ்க்கை எதிர்மாறாகவே அமைந்து விட்டிருக்கிறது இந்த உலகத்தின் உருவகமாகவே வாழ்க்கையும் வழி காட்டுகிறது.

நினைப்பது நம்வசம் இருக்கிறது. ஆனால் நடப்பது நம் கையில் இல்லை என்பதை மட்டும் நாம் புரிந்துகொண்டு விட்டால், நெஞ்சத்திலே தெளிவு வந்துவிடும். நினைப்பிலே வலிமை வந்துவிடும், வழியிலே நிதானம் வந்துவிடும். வாழ்க்கையில் அமைதி வந்துவிடும்.

ஆகவே, ஆத்திரப் படக்கூடாது என்று இருந்து விட வேண்டியது தான் என்ற முவுக்கு வந்து விடலாமா என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள், அதுவும் நியாயம் தான்.

கோபப்படாதவன் கோழை என்பார்கள் சிலர். கோபப்படத் தெரியாவன் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்று வாதம் பன்ணுபவர்களும் உண்டு.

கோபப்படலாம். கொந்தளிப்படையலாம், குமுறலாம், ஆனால் இவையெல்லாம் நடை முறைக்கு, வாழ்வின் முன்னேற்றத்திற்கு வெற்றிக்கு ஒத்துவருமா!

அனுபவமில்லாதவர்கள் ஆத்திரப்பட்டு வார்த்தைகளை இறைத்து விடுவார்கள், அடக்கும் சக்தியற்றவர்கள் சிலர் அடிதடியில் இறங்கி விடுவதுமுண்டு. அடாவடிக்காரர்கள் என்பார்களோ ஆர்ப்பாட்டத்தல் புகுந்துவிடுவார்கள்.

இவையெல்லாம் ஏன் ? ஆத்திரமடைந்த மனதை அமைதிப் படுத்திக் கொள் வதற்காக. ஆனால், அறிவுள்ளவர்கள் என்ன சொல்வார்கள் ? என்ன செய்ய வேண்டும் ?