பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109



உடல்வலிக்கு என்று முதலில் தொடங்கியவன் இப்பொழுது காசு கைக்கு வந்து கொண்டிருப்பதால், தினம் குடிப்பது என்று விரதம் எடுத்தவன் போல செய்து வந்தான்.

பகலில் கல்லூரி, மாலையில் இரும்புக்குண்டு எறியும் பயிற்சி, என்று மரியாதையாக இருந்தாலும், அவன் கூட இருந்த 'குடிகாரர்கள் அவனே தனியே விட்டு வைக்கவில்லை, அற்புதமான போதை தலைக்கேறிக் கொண்டு இருந்தது.

ஒரு நாள் வேணு, விளையாட்டுமைதானத்தின் ஒரத்தில் இருந்த ஒரு மரத்தடியில், இன்னொரு நண்பனுடன் குடித்துக் கொண்டிருந்தை குணசேகர் பார்த்துவிட்டார்.

குணசேகர் வந்தது வேணுவுக்குத் தெரியாது. அவர் கார் சென்றதைத் தான் பார்த்தான். அதனால், தான் செய்தது அவருக்குத் தெரியாது" என்று நண்பன் சொன்ன தைரியப் பேச்சை சமாதானமாக எடுத்துக் கொண்டான்.

வேணுவின் விவகாரம் வளர்ந்து கொண்டிருந்ததுமார்லண்டோவின் பயிற்சியும் பேச்சும், அவன் மண்டைக்குள் போனாலும், அது திறமையை வளர்க்கும் செயலாகத் திரும்பி வரவில்லை.

என்ன காரணம் என்று மார்லண்டோவுக்குப் புரிய நாளுக்கு நாள் அவனது உடல்நிலை மாறிக் கொண்டிருப்பதை மட்டும் அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.

எப்பொழுதாவது குடிக்கும் பழக்கம் உள்ளவர் மார்லண்டோ, அன்று அவர் மற்றவர்கள் வற்புறுத்தலுக்காகக் குடிக்க வந்தார். அதனால் தான் அவர், வேணுவை குடிக்க அனுமதித்தார்.