பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

117



‘மனிதரால் ஆகக்கூடிய முயற்சியெல்லாம் முடிந்து விட்டது. இனி ஆண்டவகைப் பார்த்து ஏதாவது அதிசயம் நிகழ்த்தினால்தான் இவர் எழுந்து நடமாட முடியும்’ என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள்,

குணசேகருக்குப் பணிவிடை செய்த நேரம்போக, பூஜை அறையிலே இருந்தார் அவரது மனைவி. உலகுக்கு ஊழியம் செய்யப் போய், இப்படி ஒன்றுக்கும் உதவாமல் எல்லாம் போய்விட்டதே என்ற கவலை அவரையும் அடிக்கடி பாடாப் படுத்திக் கொண்டிருந்தது.

இன்பநாதனுக்கோ எதுவுமே விளக்கவில்லை, ஓர் உண்மையான நண்பனே, உயர்ந்த பண்பாளனை, உத்தமனை இப்படி படுத்தப் படுக்கையில் வீழ்த்தி விட்டோமே என்று அவரும் மனம் நொந்து கிடந்தார்.

மூன்று மூனையிலே
மூனுகுளம் வெட்டினேன்
ரெண்டு குளம் பாழ்
ஒன்னுலே தண்ணியே இல்லே

என்ற பாட்டைத் தான் மனதுக்குள்ளே பாடிக் கொண்டு இருப்பது குணசேகருக்கு வழக்கமாகி விட்டது.

இன்பநாதன் எந்தப்பாட்டைப் பாடுவார்? கடவுள் கை விடமாட்டார் என்ற நம்பிக்கை மட்டும் அவரை நடமாடச் செய்து கொண்டிருந்தது.