பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

125

நாதன்...முத்துவுக்கு...வைத்தியம் பண்ண...பணம் குடு ... குணசேகர் இன்பநாதனுக்கு இப்படிக் கூறியதைக் கேட்டு முத்துசாமி திடுக்கிட்டான்.

பாவிக்கு இரக்கம் காட்டவேணும்யா...நான் இப்படியே இருமி இருமிச் சாகுறேன்...உலகம் புகழ வைக்குறேன்னு முன்வந்த உங்களை, படுத்த படுக்கையாக்கிட்டு, நானும், செத்த சவம்போல உலவிகிட்டு இருக்குறேனே...எனக்கு எதுக்கு மருத்துவம்? வேண்டாய்யா? வேண்டாம் !

முத்துசாமிக்கு சமாதானம் கூறினர் இன்பநாதன். அவனே அருகே இருந்த நாற்காலியில் உட்கார வைத்தார். சிறிது நேரம் அமைதி நிலவியது. முத்துசாமி கண்களைத் துடைத்தவாறு பேசத் தொடங்கினான்.

சார் ! இந்தப் பத்திரிக்கையை படிச்சீங்களா ?

என்ன விஷயம் !

சார் ! நம்ம வேணுவைப் பத்திய விஷயம்.

இன்பநாதன் ஆலுடன் பத்திரிக்கையை வாங்கிப் பார்த்தார் !

வேணு ! உனக்கு இந்த நிலைமையாவரனும் ?

இன்பநாதன் தன்னையறியாமல் கத்தியதைக் கேட்ட குணசேகர் திடுக்கிட்டார்!