பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



127


குடிப்பழக்கம் இப்படி ஒரு கொடுமையா போச்சே! அவன் வலதுகை நொறுங்கிப் போச்சே ! இனிமே என்ன பண்ணப் போறான் ? இன்பநாதன் வேதனையுடன் பேசினார்.

சாரி ! இலட்சியம் இல்லாத வாழ்க்கை அவலட்சணமா போயிடும்னு சொல்வாங்க சார். அதுக்கு நாங்க ரெண்டு பேரும் தான் உதாரணம். நாங்க இனிமே எதுக்கும் லாயக்கு இல்லிங்க...

காலேஜ் ஸ்டுடன்ஸ்னு சொன்னு-கண்டபடி அலேயனும், சுதந்திரமா திரியனும், நினைச்ச தெல்லாம் பேசனும்,நிலை கெட்டு குதிக்கனும்-யாரையும் மதிக்காம இருக்கனும்ங்கற ஒரு வரட்டுக் கொள்கை, எல்லாத்தையும் கெடுத்து, நம்ம சமுதாயத்தையே எப்படி கெடுக்குதுங் கறதுக்கு எங்களே பார்த்து எல்லாரும் புரிஞ்சுக்கனும்.

இப்படி ஒரு நல்ல சந்தர்ப்பம் யாருக்குக் கிடைக்கும் ? எங்களுக்குத் தான் கிடைச்சது. ஒரு அரசாங்கம் கூட ஏத்துக்க முடியாத பொறுப்பை ஐயா தர்ரதுக்கு முன் வந்தாங்க.சாக்கடையில போட்ட சத்தனம் மாதிரி ஆயிடுச்சே !

நாங்க தான் இப்படி போயிட்டோம்....அந்த நேசலிங்க மாவது நல்லது பண்ணியிருக்கக் கூடாதா ? முத்துசாமி மிகவும் வேதனைப்பட்டுப் பேசிக் கொண்டிருந்தான்.

வேணுவைப் போய் முத்துசாமியும் இன்பநாதனும் ஆஸ்பத்திரியில் பார்த்தார்கள்.

துணியாய் துவண்டு கிடந்தான் வேணு. ஆள் பிழைத்ததே அதிசயம் என்றார்கள் அங்கே.கைகளில்து தலையில் பலத்த கட்டுடன் படுத்திருந்தான்.