பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128



இன்பநாதனைப் பார்த்ததும் வேணு அலறித் துடித்தது, பார்க்க மிகவும் பாவமாக இருந்தது. அழுது முடியட்டும்.

அப்பொழுதுதான் அவன் மனம் இலேசாக இருக்கும் என்று. மெளனமாக அமர்ந்திருந்தார் இன்பநாதன், முத்துசாமியோ அவன் இன்னொரு கையை பிடித்தபடி இருந்தான்.

நேத்து நான் Friends கூட சேர்ந்து நிறைய குடிச்சுட்டேன். மாம் பலத்துல, பாண்டி பஜார்ல உள்ள தியேட்டருக்குப் போய்தான் ஆசனுட்னு பிடிவாதம் பிடிச்சேன், மற்றவங்களும் வந்தாங்க... டிரெயின்ல ஒரே கூட்டம். எல்லாம் அடுத்த டிரெயின்ல போகலாட்னு சொன்னாங்க...

நான் தான் முடியாது , இதில் போகலாம்னு சொல்லி ஏறினேன். கம்பியை பிடிச்சி தொங்கினேன். நான் தான் பெரிய ஸ்போர்ட்ஸ் மேன்னு நினைட்பு... அந்த அசட்டு. தைரியம், அரியாய கெளரவம்...அடங்காததற்பெருமை. அறிவில்லாத ஆணவம். இதுங்க விரட்ட நான் ஏறுனேன். . போதையில ஒன்னும் புரியலே...கீழே விழுந்துருக்கேன். இட்ப என்னை பார்த்தீங்களா ஐயா ! இனிமே நான் எந்த கையால சாட்புடுவேன்.எந்த கையால இரும்புக்குண்டு எறிவேன். என் தப்புக்கு சரியான தண்டனை. கடவுள் சரியான நீதிபதி தான். அழுகையும் பேச்கமாக வேணு பிதற்றிக் கொண்டிருந்தான்.

கெட்டு போனதுக்குப்புறம் தான் எல்லாம் திருந்துறாங்க... அவங்களே என்ன செய்யுறது ! மன்னிக்கத்தான் முடியும். மறுவாழ்வு தர முடியுமா!

விளையாட்டுல கெட்டிக்காரரா வரனும் கு ஒரு முறை தான் முடியும். உடம்பு சக்தியோட இருந்தாதான் முடியும். இப்படி கெட்டுப்போனபிறகு, மறுபடியும் முயற்சி செய்தச முடியுமா!