பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



130


ரப்பர் பந்து ஒன்று...நல்ல வேளை. இதே கிரிக்கெட் பந்தாக இருந்தால் என்ன ஆவது!

சிறுவர்கள் பலர் சேர்ந்து கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தனர் சிலர் சடுகுடு ஆடினர். வேறு சிலர் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

இயற்கையாக உள்ள இயக்கம்தானே இந்த விளையாட்டு. இதனை வளர்க்கத்தானே உடற்கல்வித்துறை. இதில்பாடு படத்தானே உடற்கல்வி ஆசிரியர்கள்!

வளரும் குழந்தைகள் உள்ள பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை. ஆசிரியர்கள் இருந்தால் மைதானம் இல்லை. மைதானம் இருந்தால் விளையாட்டுப் பொருட்கள் இல்லை. இன்னும் எல்லா வசதியும் இருந்தால் ஆசிரியர்கள் இடையே பல பிரிவுகள்.

உடற்கல்வி ஆசிரியர்களிடையே எத்தனை பிரிவுகள்லோயர், ஹையர், டைரக்டர் என்ற பிரிவுகள். ஒருவரை ஒருவர் குறைகூறியும். முறையில்லாமல் நடந்து கொண்டும் ஒருவாறு இந்தத் துறையையே தரம் தாழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள்.

விளையாட்டுக் குழுக்கள் என்று மாவட்ட மாநில அளவில் இருக்கிறது என்றால், அதில் உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளே போக முடியாத அளவு அவல நிலை. மாவட்ட மாநில தேசிய அளவில் நடுவர்கள் என்றால், அதிலும் போய் போட்டியிட்டு ஒருவராக பணியாற்ற முடியாத சூழ்நிலை.

விளையாட்டைத் தெரிந்தவர்கள் விளையாட்டுத் துறையை ஆள்கிறார்கள். விளையாட்டைப் படித்தவர்கள். விளையாட்டு