பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

135

நீங்க ஏதோ கஷ்டத்துல வந்து உட்கார்ந்துகிட்டு இருக்குறீங்க...நான் ஏதோ, என் கஷ்டத்துக்குப் பேசிக்கிட்டு இருக்குறேன். நஷ்டத்துக்கு வியாபாரம் பண்ணுன குடும்பத்தலைவன் நான். அதுதான் என் அனுபவம்...நீங்களும் என் மாதிரிதான ?...பெரியவர் உரிமையுடன் பேசினார்.

நீங்க ஒங்க சொந்தப் புள்ளைங்களாலே வேதனை அடைஞ்சிங்க... நானே தத்துப் புள்ளைங்களாலே தத்தளிச்சுப் போய் நிக்குறேன்.

எந்தப் புள்ளைங்களா இருந்தா என்னங்க...இனிமே வரப்போற வாரிசுகளும் வாலிபர்களும்... சரிப்பட்டு வரமாட்டாங்க... கண்டதே காட்சி கொண்டதே கோலம்ங்குற குரங்கு கொள்கையா இருந்து, கூரையில நெருப்பை வச்சிட்டு அதுலயே குந்திகிட்டு வேடிக்கை பார்க்குற ஆளுங்க மாதிரி ஆய்ட்டாங்க...

நீங்க தான் பார்க்குறீங்களே ! நம்ம காலத்து ஆளுங்க எவ்வளவு வாட்டசாட்டமா இருந்தாங்க... உடம்பு பெரிசா இருந்தது. அது மாதிரியே மனசும் விசாலமா இருந்தது. இப்பபாருங்க...பசங்க சைஸ் எப்படி குறைஞ்சுகிட்டே வருது... குரங்கிலிருந்து மனுஷன் வந்தான்னு சொன்னாங்க.. இன்னும் கொஞ்சகாலம் போய்ட்டா, மனுஷன் உயரமும் குரங்கு அளவுக்குப் போயிரும்போல இருக்குது.

பெரியவர் ஏதோ புதுமையான கருத்தை சொல்லி விட்டது போல சத்தம் போட்டு சிரித்தார் அவர் முகம் பிரகாசமாக இருந்தது. இன்பநாதனும் சிரித்து விட்டார்.

உண்மைதான். பசங்க சைசு குறைஞ்சு தான் போச்சு எப்படியோ வாழ்ந்தா போதும்னு நினைப்பு எல்லாத்து கிட்டயும் வந்துடுச்சு... இப்படியே போனா நாடு எங்க உருப்படும்....