பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21. நடந்து வந்த நன்மை !


“எப்படி குணசேகரை சந்திப்பது? எப்பொழுது நேசலிங்கத்தைப் பற்றிப் பேசுவது? ஆட்டோவில் அவசரமாக வந்துங்கூட, இப்படி வீணாகக் காத்திருக்கும் விபரீதம் ஏற்பட்டு விட்டதே ! குணசேகர் மனைவி கொடுத்த கட்டளையை மீறி நடந்து, அவர்களையும் ஏன் ஆத்திரப்படச் செய்ய வேண்டும்?

என்னை நம்பித்தானே இந்தப் பணியில் குணசேகர் இறங்கினார்? என்னால் தானே பணத்தை அள்ளி அள்ளி இறைத்தார்? என்னால் தானே இன்று இந்த அவல நிலைக்கு ஆளாகி,படுத்தப் படுக்கையாகிக் கிடக்கிறார்?

எப்படி இவரைத் தேற்றுவேன்? எப்பொழுது இவர் நடந்து வருவதைப் பார்ப்பேன்? இந்த விளையாட்டுத்துறை வளர்ந்தால் என்ன? விழுந்தால் என்ன? எரிச்சலுடன் இன்பநாதன் தனக்குத் தானே பேசிக் கொண்டார்

உடும்பு பிடிக்கப்போய் உடும்பிடம் கையைக் கொடுத்துவிட்டு உடும்பு போனாலும் பரவாயில்லை. கையை விட்டால்