பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

பசி போனபிறகு என் கதையைச் சொன்னேன். இப்படி ஒருத்தரு இந்தக் காலத்துல இருக்காரான்னு ஆச்சரியப்பட்டான். அவனோட வீட்டுக்கு அழைச்சுகிட்டுப் போனான். அப்பாகிட்ட உண்மையைச் சொன்னான்.

என் நண்பனோட தகப்பனார் உதவி செய்தாரு. எல்லை பாதுகாப்புப்படையில் போய் ஒரு சிப்பாயா சேர்த்து விட்டாரு. அங்கே போன சமயத்தில் நடந்த ஒரு பந்தயத்துல நானும்- கலந்துகிட்டேன். என் திறமையை பார்த்த அவங்க எனக்கு உதவி செய்யத் தொடங்கினாங்க...

எனது லட்சியம் ஈடேர்ற வரைக்கும் நான் மீசை தாடியை எடுக்குறதுல்லன்னு முடிவு பண்ணிகிட்டேன். வெற்றி பெற்ற பிறகு தான் உங்களை வந்து பார்க்கனும்னு பிரார்த்தனை பண்ணிகிட்டு இராப்பகலா,நேரம் கிடைக்குறப்பெல்லாம் ஓடத் தொடங்கினேன்.

என்னோட மனசுல ஓட்டப்பந்தயத்தைத் தவிர எதுவுமே இடம் பெறலே. உங்களை நினைச்சு கையெடுத்துக் கும்பிட்டுட்டுத் தான் ஓட்டத்தை ஆரம்பிப்பேன். என் உடம்புல சக்தி இருக்குறவரைக்கும் ஓடிக்கிட்டே இருப்பேன்.. இனிமே முடியாதுன்னு நினைச்சாலும், தன்னாடித் தள்ளாடி ஓடுவேன். நிறுத்த மாட்டேன்.

என்னோட ஒடம்பு ரொம்ப பலவீனமா போயிடுச்சு, அதிகமான ஓட்டம் உடம்புக்கு ஒத்துக்குலே... இரண்டு தடவை இரத்த வாந்தி எடுத்தேன்.

ஆஸ்பத்திரியில் பெட்ல என்னை அட்மிட் பண்ணினாங்க. இனிமே ஓடினா உயிருக்கு ஆபத்து வந்திடும்னு சொன்னாங்க... என் உயிரே போனாலும் சரி, நான் என் முடிவை மாத்திக்க முடியாதுன்னு உறுதியா சொல்லிட்டேன்.

கொஞ்ச நாள் கழிச்சி உடம்பு குணமானதும், மீண்டும் ஓடினேன். இந்த நேரத்தில்தான் ஆசியப் போட்டியும்