பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

145



வந்தது. என்ன இந்திய நாட்டு சார்பாக ஒடுறதுக்கு தேர்த் தெடுத்தாங்க. ஆளு, என் பேரை நேசம்னு தான் தந்தேன். தலைமுடியும் மீசையும் என்னை வடநாட்டு ஆளா காட்டுச்சே தவிர. தமிழகு அடையாளம் காட்டுலே...

தங்கப் பதக்கம் வாங்கி, வெரறி பெற்ற உடனே உங்களை வந்து சந்திக்கலாம்னு புறப்பட்டேன் ஆனா மறு நாளே எனக்கு மலேரியா காய்ச்சல் வந்துடுச்சு. பல மாதங்கள் கஷ்டப்பட்டேன்.

"நேசம் ஒரு கடுதாசி போட்டிருக்கலாமே" என்றார் இன்ப நாதன்.

உங்களை வந்து நேரா பார்த்து கால்ல விழுந்து இந்த வெற்றிச் செய்தியை சொல்லத்தான் நான் ஆசைப்பட்டேன். வெறும் கடுதாசியிலே என் மனசைக் காட்ட ஆசைப்படலே.

யார் கிட்டேயும் இந்த விஷயத்தை சொல்லாம மனசுக் குள்ளே போட்டு குமூறிக்கிட்டே இருந்தேன். லீவு கிடைக்க இத்தனை நாளாச்சு..அதுக்குப் பிறகு தான் இங்கே வந்து பார்த்தா.ஐயா இப்படி இருக்காரு.

வார்த்தையை முடிக்காமல் கண்களை மூடியவாறு நேச லிங்கம் அழுது கொண்டிருந்தான். இன்பநாதன் மறுபுறம் திரும்பிக் கொண்டு, கைக்குட்டையால் கண்ணிரைத் துடைத்துக் கொண்டிருந்தார்.

நேசலிங்கம் தன்னை யாரோ கட்டிப்பிடிப்பதைப் போல உணர்ந்து திடுக்கிட்டுப் பார்த்தான். படுத்திருந்த குணசேகர் தான் எழுந்து உட்கார்ந்து, அவனை ஆரத் தழுவிக் கொண்டிருந்தார்

அய்யா!