பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

149



எழுந்து நின்று நடக்கத் தொடங்கிய குணசேகர் போல, தமது நாட்டு விளையாட்டுத் துறையும் நடக்கும் என்று நாமூம் நம்புவோம்.

அதிகப் பிரசங்கிகள். அகங்காரிகள், ஆணவக்காரர்கள், அற்ப சந்தோஷக்காரர்கள், அனர்த்த புத்தி உள்ளவர்கள் விளையாட்டுத் துறையை எப்படி நாசப்படுத்தி நலிவுபடுத்த முயற்சித்தாலும் நாம் ஆத்திரப் படவேண்டிய அவசிய மில்லை. அதில் அர்த்தமுமில்லை.

நாலாந்திர புத்தி உள்ளவர்கள் வாழ்வதற்கு இடையே, நல்லவர்கள் இடையிடையே வரத்தான் வருவார்கள். தேசிய உழைப்பை லட்சியமாகக் கொண்டு நாட்டின் பெருமையை உயர்த்துவார்கள். நிச்சயம் நல்லதுதான் நடக்கும்.

நாம் அன்லவைகளை மறப்போம். மன்னிப்போம். நல்லவை களையே நினைப்போம். வளர்ப்போம். மகிழ்வோம். மகிழ்விப்போம். அது தான் விளையாட்டுப் பெருந்தன்மையாகும்.

லட்சியம் ஒரு போதும் கோற்பதில்லே. வெற்றி ஒரு போதும் நிற்பதில்லை. இடையே தோற்பதுபோல் தெரியும். இறுதி வெற்றி உண்மையான லட்சியத்திற்கும் உறுதியான உழைப்பிற்கும் உண்டு என்று குணசேகர் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்கிறார். அது உண்மை தானே ! நாமும் நம்பி உழைப்போம். நன்னோக்குடன் பிழைப்போம்.

வாழ்க குணசேகர், வளர்க நேசலிங்கம். இன்பநாதனின் இனிய முயற்சி வெல்க என்று நாமும் வாழ்த்துவோம். ஏனென்றால், ஆத்திரப்படுவதில் எப்பொழுதும் அர்த்தமே யில்லை. வெற்றி காட்டும் விளையாட்டில் நாமும் பங்கு பெற்று. போராடி மகிழ்வோம். புளகாங்கிதம் பெறுவோம்.