பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. காலம் அழைத்தது!



குணசேகர் தன்னை மறந்து சிலையாக நின்று கொண்டிருந்தார். சிலையாக நின்ற அவரின் பாதங்களை அலைகள் வந்து தழுவிச் சென்றன, கழுவிச் சென்றன என்றும் சொல்லலாம்.

மனிதரைப் புனிதப்படுத்தும் வித்தையைக் கற்றதால் தான் என்னவோ, கடல்தாய் தன் அலைக் குழந்தைகளை நொடிக்கொரு தரம் கரையை நோக்கி அனுப்பிக் கொண்டிருக்கிறாள், மானிடர்களும் கரை ஓரம் வந்து, துணியை சற்று தூக்கியபடி திற்க, வந்த அலைகள் அவர்களது கால்களை வலம் வந்து நீராட்டித் தூய்மைப்படுத்தி விட்டுப் போய் விடுகின்றன,

பன்னீரில் கழுவினாலும் மீன் வாடை போகாது என்பார்கள். கடலே வந்து கழுவினாலும், மனிதரைப் புனிதப் படுத்திவிட முடியுமோ !

குணசேகர் வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டே நின்று கொண்டு இருந்தார். இடுப்பு வரையில்