பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தண்ணீர் அவரை நனைத்து விட்டிருந்தது. இன்னும் கொஞ்சம் மேல் நோக்கிப் போகவும் அலைகள் முயன்று கொண்டிருந்தன.

காலைக் கருக்கல் நேரத்தில் வேலை பற்றுப் போய் இங்கு வந்து நிற்கிறாரே இந்த குணசேகர்? என்னவாக இருக்கும்?

வேலையற்றுப் போனவர் அல்ல.வேலையை விட்டுவிட்டு வந்தவர். வேலைக்குப் போகவே வேண்டாம் என்று முடிவெடுத்து, 'கால் சீட்டு' என்பார்களே. அதிலே, தன் ராஜினாமாவை எழுதிக் கொடுத்து விட்டிருக்கும் வேலையை செய்திருப்பவர் இவர்.

தினமும் அவர் வேலைக்குப் போகுமுன், காலையில் 4 மணிக்கு எழுந்து வந்து கடற்கரையோரமுள்ள தார் சாலையில் மெதுஒட்டம் ஓடிக் கொண்டிருக்கும பழக்கம் உள்ளவர். மற்றவர்கள் வந்து சேர்வதற்கு முன்னே, தன் பணியை முடித்துக் கொண்டு வீடு திரும்பி, வேலைக்குப் போய்விடுபவர்.

அவர் வருவதும் போவதும் யாருக்கும் தெரியாது. சிறு காரியத்தைக்கூட பிரபலப்படுத்திக் கொண்டு, பெருமையடித்துக் கொள்ளும் பண்புள்ள இந்த உலகத்திற்குச் சற்றும் அவர் பொருத்தமில்லாதவர்தான்.

இன்று வழக்கத்திற்கு மாறாக. சூரியன் வந்து சுள்ளென்று அடித்த பிறகும்கூட, தண்ணீரை விட்டு நீங்காமல், தன்னை மறந்து நின்று கொண்டிருந்ததை சுப்ரமணியம் என்பவர் பார்த்து விட்டார். ஒடோடி வரத் துவங்கி விட்டார்.

யார் இந்த சுப்ரமணியம்? உடற்பயிற்சி செய்யவோ, ஓடிப்பழகவோ, மருத்துவர் யோசனப்படி காற்றாட கடற்கரைக்கு வருபவரோ அல்ல... எதைச் செய்தாலு அதைக் காசாக்க முயற்சி செய்யும் ஒரு காரியவாதி.