பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
19

குணசேகரின் மோன நிலையிலிருந்து மீட்டுக் கொண்டுவருதற்கு என்ன வழி என்று மீண்டும் யோசனை செய்தார் சுப்ரமணியம்.

இன்னைச்சி ஆபீசுக்கு போகலீங்களா ! நேரமாயிடுச்சுங்களே ! லீவு போட்டுட்டீங்களா ?

தலையை மேலும் கீழும் அசைத்துவிட்டுப் பேசாமல் இருந்தார் குணசேகர்.

அப்புறமா வந்து பாக்குறேங்க! இப்ப நான் வந்த நேரம் சரியில்லை போலிருக்குது! என்றார் தலையை சொறிந்தபடி. அவர் 'ஜகா' வாங்கினார். சுப்ரமணியத்தைப் பார்க்கும் பொழுது குண்சேகருக்கு மனது கஷ்டப்பட்டதோ என்னவோ, மெதுவாகக் கனைத்துக் கொண்டு பேச்சைத் தொடங்கினார்.

என்ன சுப்ரமணியம்! இந்தக் காலை நேரத்துல உங்களை நான் எதிர்பார்க்கலியே! என்ன சேதி! ஏதாவது முக்கியமானதா இருந்தா இங்கே பேசலாம்... இல்லேண்ணா...

பரவாயில்லீங்க... உங்களை நான் வந்து ஆபிசுல பார்த்தே பேசிடுறேன்... காசிக்குப் போயும் கர்மம் தொலையுலங்குற மாதிரி, கடற்கரைக்கு வந்தும் நம்ம பிரச்சனைகள் போகலேன்னு நீங்க நினைச்சுக்கப்படாது. அதனால, நான் மத்தியானம் வந்து உங்களை ஆபீசுல...

சுப்ரமணியம் முடிப்பதற்குள் குணசேகர் குறுக்கிட்டார்.

இனிமே அங்கே என்னை பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது. வேணுமின்னா வீட்டிலே வந்துகூடப் பார்க்கலாம்... நீங்க ரொம்ப முக்கியம்னு நினைச்சா, இங்கே கூடப் பேசலாம்...எனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லே!