பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
20

தண்ணீரை விட்டு வெளியேறி வந்து, இப்பொழுது கடற்கரை மணலில் கால் அழுந்த இருவரும் நடந்து கொண்டிருந்தார்கள். பேச்சுவாக்கில், வேலையை ராஜினமா செய்ததைச் சொன்ன பொழுது, சுப்ரமணியத்திற்கு சப்பென்று போய்விட்டது.

காரணம் என்ன என்று கேட்கலாமா என அவர் நினைத்தார். இதைக் கேட்கப் போய் ஏதாவது ஏடாகூடமாக நடந்து விட்டால்...நமக்கேன் வம்பு ! நாளைக்காவது நமக்கு காரணம் தெரியமலா போய்விடும், என்ற நம்பிக்கையில் தன் ஆவலே அடக்கிக் கொன்டார்.

குணசேகரின் சரித்திரமே சுப்ரமணியத்திற்கு நன்றாகத் தெரியும், கிராமத்தில் நிறைய நிலபுலங்கள் உண்டு கொழுத்த பணக்காரர் என்று இல்லாவிட்டாலும், நல்ல பணக்காரர் என்றே சொல்லலாம். நிறைய படித்த படிப்பு வீனாகிவிடக் கூடாது என்பதற்காக வேலைக்குச் சென்று வந்தவர்.

பெரிய தொழிற்சாலை ஒன்றில் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றும் பொறுப்பில் சிறிது காலம் பணியாற்றினார்.

யார் வந்து எந்த சமயத்தில் எதைக் கேட்டாலும், மனம் கோணாமல் பதில் சொல்லக் கூடியவர். சட்டத்திற்குள்ளாக யார் யாருக்கு என்ன உதவி செய்ய முடியுமோ, அந்த அளவுக்கு அமைதியாக உதவிகள் செய்து மகிழ்பவர். பிற உழைப்பில் பெருமை தேடிக்கொள்ள வேண்டும் என்று விரும்பாதவர். உதவியதற்காக கைமாறு எதுவும் எதிர்பார்க்காதவர்.

நமக்குத் தான் வசதி இருக்கிறதே, நாம் ஏன் கஷ்டப் பட்டு உழைக்க வேண்டும் என்று நினைக்காதவர். தான்