பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
26

பழமொழி. அதுபோல, ஒருவரது எதிர்காலத்தை உருவாக்கிய கொள்ள முடிவு எடுத்துக் கொடுப்பதும் தவறு தான் என்பதை இன்பநாதன் அறிவார்.

தனது கருத்தை தெரிவிப்பதற்கு முன்னதாக குணசேகரின் கொள்கையைத் தெரிந்து கொள்ள முற்பட்டார் இன்பநாதன்.

சினிமா நாடகத் துறையில் தான் நீங்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறீர்களே! அந்தத் துறை உங்கள் கருத்துக்களை சமுதாயத்திடம் சொல்வதற்கு நல்ல சாதனம் ஆயிற்றே! அதில் ஏன் நீங்கள் ஈடுபடக் கூடாது ?

சினிமாத் துறை நல்ல துறைதான்; ஆனால் அதிலே நல்ல சூழ்நிலை இல்லை, தங்க விலங்கு என்பார்களே ! அப்படித்தான். அங்கே இருப்பவர்கள் நிலை, சுயமாக சிந்திப்பவர்களுக்கு சில சமயங்களில் பக்கத் துணை கூட அவதில்லை கொஞ்சங் கொஞ்சமாக ஒதுங்கி விடுகிறார்கள், அதிலே பணம் போடுபவர்கள் புத்திமதிப்படி தான் போக வேண்டியிருக்கும். இன்றைய சூழ்நிலையில் அது எனக்கு ஒத்துவராது என்றார் குணசேகர்.

உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். வளைபவர்களால் தான் அங்கே வாழ முடியும். நெளிவு சுளிவு கற்றவர்கள் கூட நிமிர்ந்து நிற்க முடியாத இடந்தான். அதை விட கவர்ச்சிகரமான அமைப்பு அரசியல். உங்கள் சுதந்திர மனப்போக்குக்கு அது ஏற்ற இடம் தானே என்றார் இன்பநாதன்.

அரசியலுக்கென்று தனிப்பட்ட குணம் வேண்டும். தாக்கவும் தெரிய வேண்டும். தடுக்கவும் தெரிய வேண்டும். அடித்து விட்டு அணைத்து ஆறுதல் சொல்வால் நடிக்கவும் தெரிய வேண்டும். பொய்யையும் மெய்யாகப் பேசும் சொல்லாற்றல் வேண்டும். உண்மையை உடைத்தெறிகின்ற