பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5. விளங்காத விளக்கம்


விளயாட்டுத் துறையில் தன் இளமைக் காலத்தை எல்லாம் கழித்து, வாலிபப் பருவத்திலும் விளையாட்டிலேயே நேரங்களை செலவழித்து, அதன் காரணமாக, அகலாதபாசத்தினாலும் உறவினாலும் அதேதுறையில் பணியாற்றிட வேண்டும் என்ற விருப்பத்தினாலும் இந்தத் துறைக்கு வந்தவர்கள்தான் உடற்கல்வி ஆசிரியர்கள் என்று தன் கருத்தை! கூறத் தொடங்கினார் இன்பநாதன்.

இந்திய நாட்டில் விளையாட்டுத் துறை என்று இருந்தது உண்மைதான், அதில் தனி மனிதனுக்காக தேகப் பயிற்சிகள் தான் முக்கிய இடம் வகித்தன. தண்டால், பஸ்கி போன்ற பயிற்சி முறைகளும், உடற்பயிற்சிக் கூடங்களும் தலையாய துறையாக காலங்காலமாக விளங்கி வந்தன.

ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய விளையாட்டுத் துறையில் புதிய சகாப்தம் தொடங்கியது. அதை ஆரம்பித்து வைத்து அரும்பணி ஆற்றியவர் ஒரு அமெரிக்கர். பெயர் ஹேரி குரோபக்.