பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

வதற்குள்ளாக உள்ளே நுழைந்த குணசேகர், ஒருவர் இடித்த வேகத்தைச் சமாளிக்க முடியாமல் கறுப்புக் கோட்டுக்காரர் மேல் மோதிவிட்டு, 'சாரி'; என்று நகர்ந்தார்.

கறுப்புக் கோட்டுச்காரர். இதைக் கண்டு கொள்ளாதவர் போல நின்று கொண்டிருந்தார். இதுபோல எத்தனையோ பேரிடம் தினமும் இடி வாங்கியவராயிற்றே ! டிக்கட் கலக்டரான அவருக்கு 'அலுத்து' போய் விட்டது போலும் !

நீலகிரி எக்ஸ்பிரஸ் நிற்கும் பிளாட்பாரம் நோக்கி நடந்தார். அங்கே ஒரு கூட்டம் கூடியிருந்தது. ஆவலோடு சிலர், அரு வெறுப்போடு சிலர் அங்கே அவர்களே வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர். குணசேகர் தன் பெட்டியைக் கீழே வைத்துவிட்டு என்ன கூட்டம் அது என்று எட்டி நின்றவாறே எட்டிப் பார்த்தார்.

சில இளைஞர்கள் சத்தம் போட்டுப் பாடிக் கொண்டும், தரிகுறவர் கண் ப் போல இடுப்பை, வளைத்துக் கொண்டும், நெளிந்து கொண்டும் 'நாகரிமாக' ஆடிக்கொண்டிருந்தார்கள். சில இளைஞர்கள் சற்றும் பிசகாமல் சத்தத்திற்கு ஏற்ப விசில் அடித்துக் கொண்டிருந்தார்கள்.

காசில்லாத காட்சியாக நடந்து கொண்டிருந்த இந்த நாட்டிய நிகழ்ச்சியைக் சுற்றித்தான் அவ்வளவு கூட்டம். கூட்டத் தை ச் சமாளிக்க அங்கே இருந்த போலீஸ்காரரும் வராமல் தலையிலடித்துக் கொண் டு போய்விட்டார். என்ன காரணமோ ?

இப்படிப் பொதுமக்களுக்கு இடைஞ்சல் பண்ணுகிறாகளே ! இவர்களே எப்படித் திருத்துவது ? தனக்குள்ளே இப்படிப் பேசிக் கொண்டே ஓரமாகப் போனார் ஒருபொறுப் புள்ள அதிகாரி.