பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



49


தம்புசாமியோ இருதலைக் கொள்ளி எறும்பு போலத். தவித்து போளுர். தடுக்கப்போன அவருக்கும் இரண்டு அடி விழுந்தது. அதனைக் கண்ட குணசேகருக்குப் பகீரென்றது. விஆளயாட்டுத்தனமாகவே வாய்ச்சண்டை ஆரம்பித்து. திடீரென்று கைச் சண்டையாக மாறி விட்டதே என்று வருத்தப்பட்டார்.

அதற்குப்பிறகு அந்த இரவு வெகு அமைதியாகத் கழிந்தது. விடியற்காலயில் கோவை சந்திப்பில் வண்டி வந்து நின்றது. எல்லோரும் இறங்கினர்கள் . அந்த விகளயாட்டு அணியும் இறங்கியது. ஆனல் ஏறிக்கொண்ட பொழுது இருந்த அந்தவேகம், எழுச்சி சுறுசுறுப்பு, சத்தம், குறும்பு இப்பொழுது அவர்களிடம் ஒன்றையுமே காணுேம்.

குணசேகருக்கு ஒன்று புரிந்தது. இந்த இளைஞர்கள் இப்படி நடந்து கொண்டதற்குக் காரணம் இயற்கையாகவே அவர்களிடம் இருந்த கெட்டப் பழக்கத்தினல்அல்ல. இடை பிலே வந்த பழக்கம், பலர் கூடி இருந்ததால் மனதுகுள்ளே ஏற்பட்ட புதிய தெம்பு.... மிருக ஆசையின் எழுச்சி...

யானைகள் கூட்டமாக இருந்தால் மிக அமைதியாக இருக்கும். அவற்றின் முன்னே எதிர்பட்ட ஆளுக்கு எந்தவித ஆபத்தும் கிடையாது, ஆல்ை தனியாக வரும் யானையிடம் சிக்கினல், தப்பவே முடியாது. அதாவது மிருகங்கள் கூட்டமாக இருந்தால் அடக்கமாக இருக்கும், ஆனல் சீனியாக இருந்தால் தடித்தனமான விலங்காகவே விளங்கும் என்பார்கள்.

அதையே திருப்பிப் போட்டால் அதாவது எதிர்மாளுகக் கான் ஆறறிவுள்ள மனிதர்கள் இருக்கின் ருர்கள். தனியே இருக்கும் பொழுது மனிதன் நல்லவனுகவே இருக்கிறுன், ஆனல் கூட்டமாக சேரும் பொழுதுதான் அவன் சிந்திக்கும்

பண்பினை இழந்து, சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறுன்