பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை

வெற்றி விளையாட்டு காட்டுகிறது என்னும் நூல் ஒரு நீண்ட கதையின் முழுவடிவமாகும். ஒரு புதிய முயற்சியாக உருவம் பெற்றிருக்கிறது.

நாவல் என்றவுடன், காதலன், காதலி, வில்லன். அவன் போராட்ட வெறி போன்ற நிகழ்ச்சிகள் தான் சாதாரணமாக இடம் பெறும்.

இவையெல்லாம் இல்லாமல், புதுமையாக ஒரு நாவல் எழுத வேண்டும் என்ற என் நெடு நாளைய ஆசை, இன்று - நிறைவு பெறுகிறது.

இலட்சிய வேகமும். பிறர்க்குதவும் பண்புகளையும் காண்ட குணசேகர் என்பவர் தான் இக்கதையின் நாயகர் . இவருக்கு ஓர் ஆசை பிறக்கிறது. அது இலட்சியமாக வளர்கிறது.