பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

<center> வார்ப்புரு:Rh 8. கேள்விக்கு என்ன பதில்!

:

எங்கேயோ தவறு நடக்கிறது !

இந்தச் சொற்கள் குணசேகரின் காதுகளில் ரீங்காரம் செய்து கொண்டிருந்தன. சென்னைக்கு வந்த பிறகும்கூட அவரது சிந்தையைவிட்டு அந்தச் சிந்தனைகள் இடம் பெயர மறுத்தன.

எத்தனையோ வேறு பல செய்திகளை, சுவையான சமாச் சாரங்களைத் தன் நினைவிற்கு கொண்டுவர முயன்ருலும், அவரது மனமோ மசியவில்லை. மலைபோல குறுக்கே படுத்துக் கொண்டு. பசு போல அசைபோட ஆரம்பித்து விட்டது.

இந்த பரந்த பாரத பூமியில் 66 கோடி எண்ணிக்கைக்கு மேலுள்ள மக்கள் தொகுதியில், ஒரு வீரன் கூட ஒலிம்பிக் 'பந்தயத்தில் தகுதி பெற முடியாமல் தள்ளிப் போய்க்கிடக்கு "மு தள்ளப்பட்டுக் கிடக்கிருன். அவமானத்தின் சிகரம் அல்லவா இந்த நிலை ?

அப்படி என்ருல், ஒன்று இந்த நாட்டிலே ஆற்றல் "பாயிருக்க வேண்டும் அல்லது ஆண்மை குறைந்திருக்க