பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



59


விடாமல் அந்தப் பகுதி மக்கள், திறந்த வெளிக் கக்கூஸாக அதைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். சுவர்களின் ஓரங்களிலே உடைந்த மட்பாண்டங்கள், சிதறிக்கிடந்த கண்ணாடி பாட்டில்கள், கிழிந்த கோணிகள், கந்தலான பாய்கள் இன்னும் என்னென்னவோ கிடந்தன. பாதுகாப்பான குப்பை மேடாக அம் மை தானம் பயன்பட்டுக் கொண்டிருந்தது. மறைந்திருந்து சீட்டாடும் மண்டபமாகவும் பலர் சேர்ந்து குடித்து மகிழும் குகைக் கோயிலாகவும் அந்த மைதானம் உதவிக் கொண்டிருந்தது.

எவ்வளவு செலவழித்து இந்த மைதானத்தை உருவாக்கியிருப்பார்கள் ? எத்தனை எத்தனை இலட்சியக் கனவோடு இதை படைத்திருப்பார்கள் ?

நிகழ்காலம் இறந்த காலத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது. இந்த நிகழ்காலத்தைப் பார்த்து எதிர் காலம் எப்படிச் சிரிக்குமோ ?

ஆடுகின்ற மைதானமான து காட்சி தந்த அலங்கோலம் அவரைத் திகைக்க வைத்தது. திக்கு முக்காடச் செய்தது. செய்வதறியாது செயலாற்று நின்றர் குணசேகர்.

`ஒரு கிரவுண்டு இன்று என்ன விலை விற்கிறது! லட்சக் கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள இடத்தை, விளையாடும் இடமாக ஆக்கி வைத்திருக்கின்றார்கள் என்றால், அப்படி செயதிருப்பவர்கள் அறிவற்றவர்களா என்ன? ஏன் இப்படி இந்த இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று பொதுமக்கள்தான் எண்ணிப்பார்க்க வேண்டாமா?

நமக்காகத்தானே இந்த இடத்தை விளையாடஏற்பாடு செய்திருக்கின்றார்கள் என்று இளைஞர்களாவது எண்ணிப் பார்த்து செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டாமா?

ஒன்றுமே இல்லை. ஆதிகாலத்து மக்கள் போன்ற, விளக்கம் பெறாத அறிவு. முற்றிப்போன நாகரிகத்தின் முடியில்