பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
63


அதனால் உண்மையான திறமையுள்ள விளையாட்டு வீரர்கள் சத்தியுள்ள எதிரிகளால் சாய்க்கப்படுகின்ற வேதனை...

தனக்கு வேண்டியவர்களுக்கு ஒரு நீத; வேண்டாதவர்களுக்கு புதிய விதிமுறை ஏற்படுத்தி விளக்கின்ற அநீதி, அ ப் படி ஆட்சி செய் கின்ற அநியாயக்காரர்கள் ஆங்காங்கே இருப்பதால் தான் விளையாட்டுத் துறை தலையெடுக்க மாட் டேன் என்கிறது! என்ற எண்ணம், தனது நண்பர் வாசு பேசுவது போல அவர் காதில் ஒலித்தது.

வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைக்குள்ளே வீற்றிருக்கின்ற எலும்புகள், மற்றும் துகள்கள் போல, விளையாட்டுத் துறைக்குள்ளும் இப்படி ஒரு காட்சியா?

மைதானத்தைப் பார்க்கப்போய் மலைபாகக் கனக்கின்ற நெஞ்சுக்குள்ளே, அலைகளாக எழுத்து விழுந்த எண்ணங்கன் அவரை அந்த இடத்திலிருந்து நடத்திச் சென்றன. அவரையும் அறியாமல் அவரது கால்கள் ஓரிடத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தன. அந்த இடம் அவருக்கு உகந்த இடம் தான்.

வாருங்கள்! இந்த நேரத்தில் வருகிறீர்கள்? நீங்கள் சொல்லி அனுப்பியிருந்தால், நானே வந்திருப்பேருே என்றார் இன்பநாதன்.

இன்பநாதன் குணசேகரை கூர்ந்து கவனித்தார் குழப்பங்கள் மனதுக்குள்னே குமைந்து கொண்டிருக்கின்றன என்பதை அவர் முகம் தெள்ளத் தெளிவாகக் காட்டிக் கொண்டிருந்தது.

ஏன் இப்படி ! இன்பநாதனும் குழப்பத்துடன் காணப்பட்டார்.

இதுக்கு ஏதாவது பரிகாரம் கண்டால் தான், எனக்கு மனசு நிம்மதியா இருக்கும் போல இருந்தது. அதனால்தான்