பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9. லட்சியமும் லட்சணமும்


லட்சிய இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை1 லட்சியம் இல்லாத மனிதனுக்கும். வீதியில் திரிகின்ற மிருகத் திற்கும் கான்ன வித்தியாசம் இருக்குது ? கண்டதை சாப்பிட்டுட்டு கண்ட இடத்துல தூங்கறதும், கண்ணுல பட்டதைப் பார்த்து சந்தோஷப் படுறதும், கண்ட கண்ட செய்திகளப் பேசிப் பொழுதை போக்குறதும் மட்டும் மனுஷருக்கு வாழ்க்கையில்லை.

மனுஷரா பொறந்தா ஒவ்வொருத்தருக்கும் ஓர் உயர்ந்த லட்சியம் வேணும். அது தான் புகழ். அந்தப் புகழை. அடையறதுக்காக, அற்ப வழிகளிலும் அநியாய முறைகளிலும் அறிவையும் உழைப்பையும் பயன்படுத்தக் கூடாது. நேர்மை யான வழியில், நியாயமா செய்யுற காரியத்தால் வர்ற புகழ் தான் கடைசி வரையிலும் நிலைக்கும்.

இந்த மாதிரி லட்சியம் வேணும்னு, சின்ன குழந்தை களுக்கு சொல்லித் தரனும். பத்து வயசுலேயே பழக்கப் படுத்துளு தான். இருபது வயசு வரும்போது, அவங்க இட்சியத்திற்காக உழைப்பாங்க. முன்னுக்கு வரனும்னு முயற்சிப்பாங்க.