பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
70


போன்ற அகில உலக அளவில் அவர்களே உயர்த்தப். போறேன். எத்தனே லட்சம் செலவானலும் பரவாயில்லை. என்னுடைய லட்சியம்தான் எனக்கு லட்சிய என்று குணசேகர் உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.

இன்பநாதன் மிகவும் சாவதானமாக குணசேகர். முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். குணசேகரின் இலட்சியம் அவருக்கு பிடித்திருந்தது. ஆனால், அது எப்படி முடியும் எங்குபோய் முடியும் என்பது போன்ற கேள்விக்குறியில் அவரது புருவங்கள் பலமுறை ஏறி இறங்கிக் கொண்டி ருந்தன.

நெருப்பாற்றிலே மயிர்ப்பாலம் கட்டி வைத்தால் எப்படி இருக்கும் ? உச்சி வெயில் வேளையில் பாறையின் மீது வெண்ணெய் குவியிலைக் கொட்டி வைத்தால் எப்படி இருக்கும் ?

குணசேகர் மேற்கொள்ளும் காரியம் இப்படித் கான் ஆகுமோ-இன்பநாதன் தன்னுடைய மனதுக்குள்ளே பேசிக் கொண்டார்.

இன்பநாதன் ? நீங்க எனக்கு மூனுபேரை தேர்ந் தெடுத்து தர்ரீங்க-பிறகு நான் பார்த்துக்குறேன். வாங்க போகலாம், என்று குணசேகர் எழுந்தார்,

பேசிப் பேசி பொழுதைப் போக் கிய தலையிலே ஒரு பொறுப்பு நெருப்பாக வந்து விழுந்தது. குணசேகரே குதூகலமாக நின்று கொண்டிருந்தார்.