பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

நின்றுவிடு...நெருப்பாற்றில் நீந்தப் போகிறேன் என்பது பேசுவதற்கு வீரமாக இருக்கும்... இறங்கும்போது கோரமாக போய் விடும்! உனக்கு ஏன் இந்த வம்பு?

ஏன் இப்படி பேசுறீங்க.... நீங்க நடத்தாத போட்டியா? நீங்க பார்க்காத ஆட்களா! பொது அனுபவங்களா ? இப்படி வெறுத்துப் பேசுற அளவுக்கு என்ன நடந்துச்சு ? ஏன் இப்படி மாறிப் போயிட்டிங்க?... குணசேகர் சிரித்துக் கொண்டே கேட்டார்.

என்னுடைய ஆணவம் தான் காரணம், இந்தக் கசப்பான அனுபவம் என்னோட அறியாமையினால் கூட ஏற்பட்டிருக்கலாம். இல்லேன்னா, தான் சேர்த்துக் கொண்ட ஆட்களினாலேயும் வந்திருக்கலாம். மொத்தத்துல, நான் கொடுத்தது பணம் அடைஞ்சது அவமானம். நான் வேற எதையும் உங்களிடம் சொல்லத் தயாரில்லே என்றார் தயாளன்.

அப்படிச் சொன்னா எப்படிங்க? நான் ஒரு லட்சியத்தோட இதுல ஈடுபடுறேன், நீங்க எனக்கு முன்னோடியா இருந்திருக்குறீங்க. நாங்களே உங்களைப் பார்க்க வரனும்னு நினைச்சுக்கிட்டிருந்தோம். கும்பிடப்போன தெய்வம் கூப்பிட்டது மாதிரி இருக்குது.

ஒரு காரியம்னா நல்லதும் இருக்கும்! கெட்டதும் இருக்கும். இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்துட்டு, அப்புறம் முடிவு எடுக்குறது தானே புத்திசாலித்த்தனம்!

ஆமா குணசேகர் ! நீங்க சொல்றது நியாயம் தான், நல்லதுங்கறகாரியம் பணத்தை செலவு பண்றது. கெட்டதுங்கற முடிவு நமக்கு வற்ற அவமானம். நான் பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்து போட்டிய நடத்தச் சொன்னேன். கண்டவன் நின்னவன் எல்லாம் தொண்டைக்கு மேல நிக்குற வரைக்கும் தின்னே தொலைச்சானுங்க... எங்கேயோ ஆற்றுல