பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

அள்ளுற தண்ணி மாதிரி என் பணத்தை நினைச்சானுங்க.. ஒரு பைசா செலவுன்னா பத்து பைசான்னு கணக்கு எழுதுனானுங்க..

எனக்கு எல்லாம் தெரிஞ்சாலும் ஏன்னுகேட்க முடியலே! செய்யுற தப்பைக் கண்டிக்க முடியலே...அப்படி ஒரு கூடமே இந்த பீல்டுல இருக்கானுங்க.. கடைசியில், கொடுத்த பணத்துக்கு கணக்கு குடுறான்னு கேட்டா... கலாட்டா... ஏச்சுபேச்சு !

பணம் வாங்குற வரைக்கும்தான் மதிப்பு. கெளரவம் விசுவாசம் எல்லாம். கைக்கு பணம் வந்துட்டா எல்லாமே மாறிப்போயிடும் !

புரியாமல் உட்கார்ந்திருந்தார்கள் இன்பநாதனும் குணசேகரும். தயாளனே தணல்மேல் உட்கார்ந்திருப்பதுபோல இருக்கையில் அமர்ந்த வண்ணம் பேச்சைத் தொடர்ந்தார்.