பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



11. ஆசைக்கோளாறு


தயாளன் தன்னை மறந்து பேசிக் கொண்டிருந்தார். குணசேகரும் இன்பநாதனும் குறுக்கே எதுவும் பேசாமல் குறுகுறுக்கும் நெஞ்சத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.

விளையாட்டு என்பது தானே வளர்ந்திடுற ஒரு துறை இல்லே. ஆர்வமா விளையாடுற ஆட்டக் காரர்களால் மட்டும் அது வளர்ந்தடாது. ஆர்வத்தோட பணம் செலவு செய்து நடத்துற பணக்காரங்க உதவியினால்தான் வளரும், அதை காசு குடுத்தும், இலவசமாகவும், பார்க்க வர்ர பொது மக்களினாலும் தான் நல்லா வளரும்.

இது ஒலிம்பிக் பந்தயத்தை ஆரம்பிச்ச கிரேக்க நாட்டில் இருந்து, அவங்க காலத்துலயிருந்து தொடர்ந்து வர்ர தர்மகாரியம் தான். அந்த மாதிரி தான் நம்ம நாட்டிலயும், விரல் விட்டு எண்ணக் கூடிய பெரிய மனிதர்கள் பலர் உதவி செய்துட்டு வர்ராங்க.

”அந்த விரல் விட்டு எண்ணிக்கையிடும் நபர்களில் நீங்களும் ஒருவர்னு எங்களுக்குத்தெரியும்" என்றார் இன்பநாதன்.

உண்மை தான் நாதன்! அந்தப் பேரையும் புகழையும் சம்பாதிக்கனும்னு நான் இந்தத் துறைக்கு வரலே. நானே