பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84


ஆண்களுக்கு ஒரு குழு, பெண்களுக்கு ஒரு குழு. என்று. இரண்டு குழுக்களை நான் வைத்திருந்தேன்.

பெண்களைத் தேர்ந்தெடுப்பதில் எனக்கு சிரமம் இல்லை. கோடீஸ்வரக் குடும்பத்தில் பிறந்த ஒரு பெண், அவளையே நான் குழுத்தலைவியாகப் போட்டிருந்தேன். அவளுக்கு குழுவை நிர்வகிக்கும் பொறுப்பையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தேன். அதனால், எல்லாம் சுமுகமாகவே நடைபெற்றது

ஆண்கள் குழுவில் இரண்டு பேர் தேவை என்றதால், நான் பல போட்டிகளையும் பார்த்து அதிலிருந்து அவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று நானும் தேடி அலேந்தேன்.

ஒரு கிராம விளையாட்டுப் போட்டியில், ஒரு இளைஞன் நன்றாக விளையாடியதை பார்த்து, அவனே என் குழுவில் சேர்த்துக்கனும்னு முடிவு பண்ணினேன் அவனோ படிக்காதவன். வேலை செஞ்சாதான் ஜீவனம் அப்படி ஒரு நிலமை அவனுக்கு விறகு வெட்டுறது, மீன் கூடையை சைக்கிள்ல. வாடகைக்கு ஏத்திகிட்டு போய் அடுத்த ஊரில் தர்ரதுதான் அவன் வேலை. அதுக்கு வர்ர கூலி வயித்துக்கே போதாது.

இங்கே கூட்டிகிட்டு வந்து, நல்ல வேலையா பார்த்து கொடுத்துட்டு, ஆட்டத்துல நல்ல பயிற்சி கொடுத்தோம் இங்கிலீஷ் பேசுற அளவுக்கும் அவனுக்கு, டியூஷன் வச்சோம். விளையாட்டுல தேர்ச்சி வரவர, அவன் பேச்சிலயும் போக்குலேயும் பல மாறுதல் வந்தது. ஒரு சில சமயத்துல ஏண்டா இவனே பார்த்தோம்னு கூட நினைச்சி வருத்தப் படுவேன். அவனுக்கு ஆகுற இவ்வளவு செலவும் நானே ஏத்துகிட்டிருந்தேன்.

ஒரு வருஷத்தை தாக்குபுடிச்சுட்டேன். ஆனா ஒரு சமயம் அந்த ரயில் வண்டியில் நடந்த நிகழ்ச்சி அதுதான் என்னேயே மாத்திடுச்சு. அவ்வளவு கஷ்டமா போயிடுச்சு!