பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83



பத்துபேரு இருக்கும் போது, தன்னை பெரிய அந்தஸ்து உள்ளவனுன்னு காட்டிக்கறதுக்காக அவன் பண்ணுன அந்த 'ஜபர்தஸ்தை' என்னால தாங்கிக்க முடியலே என்னை மன்னிக்கவும் முடியலே !

பெரிய கோடீஸ்வரன் பொண்ணு, கிடைச்சதை சாப்பிடுட்டு, மத்தவங்க கூட சகஜமா பழகிக்கிட்டு இருந்ததையும் பார்த்தேன். சோத்துக்கே வழியில்லாம கிடந்தவனை கொண்டு வந்து, சகல உதவியும், செஞ்சு நானே வேலைக்காரனாக இருந்து உதவி செஞ்சா, டிபன் நல்லால்லே நான் கையாலே சாப்பிடறதில்லே, ஸ்பூன் இருந்தாதான் சாப்பிடுவேன்னு அடம் புடிச்சது.. எனக்கு எப்படியோ இருந்தது.

அவ்வளவு தான். நான் அப்பவே முடிவு பண்ணிட்டேன். என் ஆசைக்கு கிடைச்ச அவமானம்... நமக்கு விளையாட்டு மேல இருந்த விருப்பத்துல தானே. பணத்தையும் செலவு பண்ணிட்டு, இப்படி அவமானப்பட வேண்டியதாப் போச்சு. அப்பவே முடிவு பண்ணிட்டேன் குழுவைக் கலைச்சிட்டேன். யாரு எப்படியோனு எனக்கென்ன. இந்த விளயாட்டுக்காக வீனா என் மனசை புண்படுத்திக்கனும்னு ஒதுங்கிட்டேன்.

சிந்தாமணி பேசி ஒய்ந்ததும், அதிவேக ரயில் ஒடி வந்து பிளாட்பாரத்தில் நின்றது போல் இருந்தது. அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். மெளன கீதங்களாக அவை ஒலித்துக் கொண்டிருந்தன.

தயாளனிடமும் சிந்தாமணியிடமும் விடை பெற்றுக் கொண்டு, குணசேகரும் இன் பநாதனும் புறப்பட்டனர்.

இந்த சம்பங்களைக் கேட்ட பிறகாவது, குணசேகர் தன் கருத்தை மாற்றிக் கொள்வார். கொள்கையை உதறி விடுவார் என்று இன்பநாதன் எதிர்பார்த்தார்.