பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஒரு முன்னோட்டம்

ஆத்திரப்படுவதில் அர்த்தமில்லை என்பார்கள். ஏனெனில் ஆத்திரம் அறிவுக்குச் சத்துரு என்பதால்.

ஆத்திரப்படுபவன் ஏமாந்து போகிறன் என்பார்கள், ஏனெனில் ஆத்திரம் அன்பை மறைத்து விடுகிறது, ஆராயும் பண்பினைக் குறைத்து விடுகிறது என்பதால்.

இவ்வளவு தெரிந்தும் ஏன் ஆத்திரப்படுகிறோம்? ஆங்காரம் கொள்கிறோம்? ஆவேசமடைகிறோம்? ஆடிப்பெருக்கு வெள்ளம் போல அடங்காது குதிக்கிறோம்? ஏன்?

ஏமாற்றம்தான் எல்லாவற்றிற்கும் காரணம். ஏமாற்றம் எப்பொழுது வருகிறது? எதிர்ப் பார்க்கும்பொழுது தான். எந்த முடிவும் தனக்குச் சாதகமாக அமைய வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கும் பொழுது, திடீரென்று எதிர்மாறாக நடந்துவிட்டால்............ ?

அப்பொழுதுதான் ஆத்திரம் வரும். அப்படி ஆத்திரப்படுவதற்கு அர்த்தமேயில்லை. ஏனென்றால் நம்முடைய வாழ்கை அப்படித்தான் அமைந்திருக்கிறது.

ஆ-1