பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

குணசேகர் கேட்காமலேயே, முத்துசாமியின் திறமையைப் பாராட்டிப் பேசினார் அவர். தன்னைப்பற்றியும் பலவாறு புகழ்ந்து பேசவும் ஆரம்பித்தார்.

இந்தத் தமிழ்நாட்டிலேயே என்னை விட்டால். ‘கோச்’ பண்ண வேறு யாரும் இல்லிங்க. நான் NIS படிக்கும்போது நான் தான் First, எனக்கு அதிர்ஷ்டம் இல்லே; இல்லென்னா நான் NISக்கே கோச்சா போயிருக்கனும். நீங்கள்லாம் இங்கே இருக்கிறீங்க எனக்கு அதுதான் கொஞ்சம் நிம்மதியா இருக்குது...

ஆங்கில உச்சரிப்பு சரியாக வரவில்லை என்றாலும் அடிக்கடி ஆங்கிலச் சொற்களை சுந்தரம் பயன்படுத்திய விதம், கேலியாகவே அமைந்திருந்தது. இன்பநாதன் சிரிப்பை அடக்கிக் கொண்டார்.குணசேகர் இன்னும் ஆச்சரியத் துடன் பார்த்தார்.

நீங்க எதுக்கும் கவலைப்படாம். நல்லா கோச் பண்ணுங்க உங்க திறமைய வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு வந்தருக்கு நீங்க உங்க திறமையை ‘புரூப்’ பண்ணிட்டா. நல்லதொரு எதிர்காலமே உங்களுக்காகக் இருக்கு. தைரியமா செய்யங்க.. என்று சுந்தரத்தை ஆதரித்துப் பேசினார்.

அப்பப்ப எங்களுக்குத் தேவையானதை கொடுத்து வந்திட்டா, எங்க முயற்சியில் முன்னேற்றம் இருக்குமே தவிர லூஸ் ஆயிடாதுங்க...

‘தேலையானது’ என்றதும் வடிவேலு முகம் சுளித்தார். இன்பநாதன் கேள்விக்குறியை முகத்தில் காட்டினார். குணசேகரோ, பணம் என்று நினைத்துக் கொண்டார்.

நிச்சயமா கிடை க்கும். எல்லா ஏற்பாடும் நடந்துகிட்டு இருக்குது சுந்தரம், தேவையானதுக்காக, எந்த நேரத்திலும்