பக்கம்:வெளிநாட்டு விடுகதைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

இங்கிலாந்து


31. காலும் இல்லை; கையும் இல்லை;
கண்ணுக் கழகாய் இருப்பவள்.
வெள்ளை உடுப்புப் போட்டவள்;
மெல்ல மெல்லக் குறைபவள்.
சிவப்பு மூக்கு உடையவள்;
சிறிது சிறிதாய்க் குறைபவள்.

32. உள்ளே இருந்தால்
ஓடித் திரிவான்;
வெளியில் வந்தால்

விரைவில் மடிவான்.

வேல்ஸ்


33. கன்னங் கரிய நிறம்
அதுவாம் கல்வி பரவ உதவுவதாம்.

34. வெள்ளை வெள்ளைச் சீமாட்டிக்கு

விளக்கு எரியுது தலைக்கு மேலே.

அயர்லாந்து


35. நிலமோ வெள்ளை;

விதையோ கறுப்பு.