பக்கம்:வெளிநாட்டு விடுகதைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19


58. ஒருவனுக்கு இரண்டு கண்;
பகலில் பார்க்கும் ஒரு கண்;

இரவில் பார்க்கும் இன்னொரு கண்.

பெல்ஜியம்


48. செத்தபின் நடனம்

செய்பவள் யாரோ?

ஹாலந்து


49. சின்னப் பையன் வந்தான்;

திருடன் ஓடிப் போனான்.

ஜெர்மனி


50. அண்ணன் தம்பி நால்வர்.
ஒருவன் ஓடுவான்; சளைப்பதில்லை.
இன்னொருவன் தின்பான்; திருப்தியில்லை.
அடுத்தவன் குடிப்பான்; நிறைவதில்லை.
மற்றொருவன் பாடுவான்; இனிமையில்லை.

51. என்னைத் தரையில் புதைத்தார்கள்,
என்போல் பலபேர் கிடைத்தார்கள்.

52. அதிக நீளமும் இல்லை;
அதிக அகலமும் இல்லை.
உடையவர் அளந்தால்

ஒரு சாண் நீளம்.