பக்கம்:வெளிநாட்டு விடுகதைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

பல்கேரியா


73. கஷ்டப்பட்டு நூல் நூற்பார்;

கட்டிக் கொள்ளத் துணியில்லை.

போலந்து


74. எல்லை யில்லாத வயலிலே
எண்ண முடியாத ஆடுகள்.

75. வயல் வெளியில் ஆடும் போது

வைரத் தோட்டைத் தொலைத்தாளாம். சந்திரன் பார்த்தான்; சபலம் இல்லை. சூரியன் பார்த்தான்; தூக்கிச் சென்றான்

ருஷ்யா


76. வீடு வாசல் காப்பவன்;
விசுவாசமாய் இருப்பவன்;
கடிக்க மாட்டான்;
குலைக்க மாட்டான்;
கதவை ஒட்டிக் கிடப்பவன்.

77. ஒருவரை இருவராய்க் காட்டும்.
உங்கள் வீட்டிலும் இருக்கும்;
எங்கள் வீட்டிலும் இருக்கும்;
அது என்ன?

78. பார்வையில்லாத மனிதன்

பலபேருக்கு வழி சொல்வான்.