பக்கம்:வெளிநாட்டு விடுகதைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27


91. இரண்டு பெண்கள் - அவர்கள்
இரட்டைப் பிறவிகள்.
ஒருத்தி மேலே போனால்,
ஒருத்தி கீழே போவாள்.

92. வலையை விரிப்பேன்-நான்
செம்படவனல்ல.
வலையிலே பிடிப்பேன்-அது

மீனும் அல்ல.

எகிப்து


93. ஓரடி நீளம்
ஒருவரைச் சுமக்கும்.

94. உழவில்லை; நடவில்லை.
உணவுக்கு உதவிடுமாம்.
தண்ணீரில் பிறந்ததுவாம்;
தண்ணீரில் மறைந்திடுமாம்.

95. தலையில்லாதவன்

தண்ணீர் எடுக்கிறான்.

மடகாஸ்கர்


@[[:User:|]]: செத்தவன் குரல்
எத்தனை பேருக்குக் கேட்குது!
அல்ஜீரியா
@[[:User:|]]: வெள்ளையாக இருப்பான்;

வெட்டவெட்ட வளர்வான்.