பக்கம்:வெளிநாட்டு விடுகதைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29


103. சின்னஞ் சிறிய தூசி விழுந்தாலும்

பொங்கி எழும் குளம் எது?

அரேபியா


104. ஆனை போலப் பெரிதாயிருக்கும்;

அடக்கிப் பிடித்தால் கையில் இருக்கும்.

ஈரான்


105. சிரிப்பான்; வாயில்லை .
அழுவான்; கண்ணில்லை.
அலைவான்; காலில்லை.
அவன் யார் ?

106. பாரில் வந்து சேரும் முன்னே

பத்து மாதம் சிறைவாசம்.