பக்கம்:வெளிநாட்டு விடுகதைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30


107. கறுப்பன் ஒருவன்.
வெள்ளையன் ஒருவன்.
காண்பது இல்லை;
தொடர்வது உண்டு.

108. பகலெல்லாம் ஊரைச் சுற்றுவான்.
இரவில்,
கதவோரமாய்க் காத்துக் கிடப்பான்.

109. கூடப்பிறந்த இருவருக்குக்
குறுக்கே சுவர் உண்டு.
ஒருவரை ஒருவர்

ஒருநாளும் பாரார்.

இலங்கை


110. வாங்குவோர், தனக்குப் பயன்படுத்தார்.
தனக்குப் பயன்படுத்துவோர் பார்க்க மாட்டார்.

111. மரத்துக்கு மேலே பழம்.
பழத்துக்கு மேலே மரம்.

112. கறுப்புத் தொப்பி அணிந்த

கனவான்-அவர் யார் ?