பக்கம்:வெளிநாட்டு விடுகதைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31


113. எத்தனை அடி அடித்தாலும்
இம்மியும் வலிக்காது.

114. உச்சியிலே நீண்ட இலை;
உடம்பெல்லாம் கணுக் கணுவாம்;
தின்பதற்கோ மிக ருசியாம்.

தேவையில்லை என்பார் யார் ?

தாய்லாந்து


115. சின்னக் குகைக்குள்ளே
சிவப்புத் துணி-அது
எந்நேரமும் ஈரம்;
எளிதில் உலராது.

116. ஓட்டு வீட்டை
உடன் தூக்கிச் செல்கிறார்.
அவர் யார் ?

117. கணக்கில்லாத பிள்ளைகளைக்
கழுத்தைச் சுற்றிச் சுமக்கும் தாய்.
அந்தத் தாய்
எந்தத் தாய்?

118. எலும்பு உண்டு; தோல் இல்லை.
கண்கள் உண்டு; தலை இல்லை.

தண்ணீரில் நீந்தும்; தரையிலே நடக்கும்.